விலங்குகள்
உலகம் என்பது என்ன? உயிருள்ள, உயிரற்ற பொருள்களால் ஆனயொன்றாகும். உயிருள்ள பொருள்கள் ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை உள்ளன. பரிணாம வளர்ச்சியில் மேற்படியில் உள்ளதாக மாந்தர் தம்மைக் கூறிக்கொள்கின்றனர். அவ்வாறு மாந்தர் உள்ளனரா? சிந்திப்போமா.நம்மைவிட ஓறறிவு குறைந்த ஐயறிவுடைய விலங்குகளின் செயல்கள் சில காண்போம்.
[1] வெய்யில் காலமது. ஒரு காட்டில் ஒரு ஜோடி கலைமான்கள் நீரைத் தேடிக் காட்டில் அலைகின்ற போது ஒருநீர் நிலையைக் கண்டன. அந்நீர் இருவருக்குப் போதுமானதல்ல. அச்சமயம் ஆண்மான் தன் பிணைமான் குடிக்கட்டும் என குடிக்கட்டுமென, தான் குடிப்பதுபோல பாவனை செய்கிறது. பிணைமானோ தன்யிணை குடிக்கட்டும் என அதுவும் பாவணை செய்கிறது.என்னே அன்பிற்கினிய செயல்! இதனை ஐந்திணை ஐம்பது
“சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் .... எனக்காட்டுகிறது.
[௨] ஓரு கோடைக் காலத்தில், ஒரு காட்டில் ஒருஜோடி யானைகள் நீரைத் தேடியலைகின்றன.சிறிய கலங்கிய நீர் நிலையைக் கண்டன.அந்நீரை முதலில் தன்பிடிக்கு ஊட்டி பின் தான் அருந்துகிறது.இதுவும் ஓர் அன்பிற்கு உரிய செயல்ன்றோ! இதனை சங்க இலக்கியம் பாலைக்கலி
“துடியடிக் கயந்தலை கலக்கையசின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறு” ... எனக் காட்டுகிறது.
[௩] எந்த விலங்கிணமும் தேவையின்றி மற்றொரு உயிரைத் துன்புறுதுவதில்லை. நாம் அப்படியா? நாம் காரணமின்றியே பிறரைத் துன்புறுத்துவதில் ஓர் மட்டற்ற மகிழ்வடைகிறோம்.
மேற்கண்ட நிகழ்வுகளைக் கண்ட நாம் இனியேனும் விலங்கினங்களை இகழாமல் அவற்றைத் துன்புறுத்தாமல், கொல்லாமலும் பாதுகாப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக