புதன், 17 பிப்ரவரி, 2010

திருக்கழுக்குன்றப் திருப்பதிகங்கள் - மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் பாடல்கள்
எட்டாம் திருமுறை            கீர்த்தித் திருவகவல்  :  ( 88 - 89 )

கழுமலமதனில்  காட்சி கொடுத்தும்
கழுக்குன்றதனில் வழுக்காதிருந்தும்


எட்டாம் திருமுறை                                   போற்றித் திருவகவல்  [ 191 ]

திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத்து அரனே போற்றி

       
எட்டாம் திருமுறை                                                            திருக்கழுக்குன்றப் பதிகம்
சற்குரு தரிசனம்

பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்
                உன்நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கிலாததோர் இன்பமே வரும்
                துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கிலாததோர்   வித்துமேல் விளையாமல்
                என்வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து 
                 காட்டினாய்க்  கழுக்குன்றிலே.(1)

 பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந்துறைப்
                 பெரும் பித்தனே
சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன்
                 உன்னைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறு
                 நாயினுனுங் கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து 
                       காட்டினாய்க் கழுக்குன்றிலே   (2)


லங்கினேன் கண்ணில் நீரைமாற்றி 
                   மலங்கெடுத்தப் பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன்
                   இனிமேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்ற நின்சேவடிகள்  இரண்டும் 
                    வைப்பிடம் இன்றியே
கலங்கினேன் கலங்காமலே வந்து
                   காட்டினாய்க் கழுக்குன்றிலே.  (3) 

பூணொணாததோர் அன்பு பூண்டு பொருந்தி
                  நாள்தோறும் போற்றவும் 
நாணொணார்ஹோர் நணமெய்தி நடுக் 
                  கடலுள் அழுந்தி நான்
பேணொணாத பெருந்துறைப் பெருந்
                  தோணிபற்றி உகைத்தலும்
காணொணாத திருக்கோலம் நீவந்து
                   காட்டினாய்க் கழுக்குன்றிலே.  (4)     

கோலமே வராகமே குணமாம்
                  பெருந்துறைக் கொண்டலே
சீலமேதும் அறிந்திராத என்
                   சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமே கரியாக நானுனை
                   நச்சி நச்சிட வந்திடும்
காலமே உனையோத நீவந்து
                   காட்டினாய்க் கழுக்குன்றிலே.  (5)

பேதமிலாததோர் கற்பளித்த 
                பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமே பலபேச நீஎன
                ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல் பொல்லாமையற்ற
                தனிச் சரண் சரணாமெனக்
காதலால் உனைஓத நீவந்து
                காட்டினாய்க் கழுக்குன்றிலே.  (6) 
                            

இயக்கிமார் அறுபத்தி நால்வரை
               எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதோர் மும்மலப்
                பழவல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின்
                தூய்மலர்க்கழல் தந்தெனைக் 
கயக்க வைத்து அடியார்முனே வந்து
               காட்டினாய்க் கழுக்குன்றிலே.  (7)  


திருக்கோவையார் -பாடல் - [107]

விண் இறந்தார் நிலம் விண்டவர் என்றுமிக்கவர் இருவர்
கண் இறந்தார் தில்லை அம்பலத்தார் கழுக்குன்றின் நின்று
தண்நறுந்தாது இருவர் சந்தனச்சோலைப் பந்தாடுகின்றார்
எண் இறந்தார் அவர்யார்க் கண்ணதோ மன்னநின் அருளே. 



கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1