திருப்பள்ளியெழுச்சி - நான்காம் பாடல்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பினைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞசலி கூப்பினர் ஒருபால்
திருபெருந்துறை உறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே
திருபெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! உன் திருச்சபையில் சிவனடியார்கள் ஞான இசையினை வீணையாலும், யாழினாலும் மீட்டுகின்றனர்.ரிக் வேதத்தை ஓதுகின்றனர். உன்னுடைய புகழ் பாடுகின்றனர். ஒரு பக்கம் மலர்களை கையில் ஏந்தி நிற்கிறனர். ஒருபக்கம் வணங்கி நிற்கின்றனர். ஒரு பக்கம் கண்ணீர் மல்கி அழுது நிற்கின்றனர். மற்றோரிடத்தில் நெஞ்சம் உருகித்துவள்கின்றனர்.வேறோரிடத்தில் தலையில் கை குவித்து நிற்கின்றனர். இவ்வளவு அடியார்க்கும் அருளும் என் இறைவா!
ஒருவகையும் அறியாத என்னையும் ஆண்டருள் செய். ஐயனே! அடியேன் உள்ளத்தில் திருப்பள்ளி எழுந்தருள்வாயாக.
திருப்பாவை - இருபத்து நான்காம் பாடல்
சென்றிலங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
க்ன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே யேந்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
அன்றொரு நாளில் உலகை அளந்தவனே உன் திருவடிகளைப் போற்றுகிறேன்.
தென் திசையில் கடல் கடந்து சென்றுஇலங்கையை அழித்த உன் வீரத்தைப் போற்றுகிறோம். கன்றுவடிவில் வந்த வத்சாசுரனை அழித்த உன் அடிகளைப் போற்றுகிறோம். கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து பசுக்களையும், யாதவர்களையும் காத்தௌன்கருணை உள்ளத்தைப் போற்றுகிறோம். பகைவர்களளின் பகைமையை அழிக்கும் உன்கை வேலினையும் போற்றுகிறோம்.என்றென்றும் உன் திருவடிக்கு சேவை செய்ய வந்திருக்கும் எங்கள் மீது இரக்கம் கொண்டு வேண்டியவற்றைத் தந்தருள்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக