திருப்பள்ளியெழுச்சி - மூன்றாம் பாடல்
கூவின பூஞ் குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விர்ப்பொடு நமக்குத்
தேவ நல் செறி கழல்தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே.
பறவைகள் கூவுகின்றன. விண்மீன்களின் ஒளி மங்கின. உதயஒளி ஓங்குகிறது. ஒளிமயமானவனே! நன்மை தரும் உன் திருவடியினை எங்களுக்கு காட்டி அருள்க. உன்னைப் போற்றாதாருக்கு நீ விளங்காதவன். திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் எம்பெருமானே! அறிவுக்கு எல்லாம் அப்பாற்பட்டவனே! எமக்கு நீ எளியவன் அன்றோ? சிவனே! நீ பள்ளி எழுந்து அருளாயே.
திருப்பாவை
இருபத்து மூன்றாம் பாடல்
மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்மாரி து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலநீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
மழைக் காலத்தில் குகையில் உறங்கும் ஆண் சிங்கம் தூக்கம் கலைந்து, நெருப்பு போன்ற தன் கண்களால் விழித்துப் பார்க்கும். பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காலகளை உதறும். தனக்கே உரிய கம்பீரத்துடன் கர்ஜனை செய்து முழங்கும். இப்படி குகையிலிருந்து எழும் சிங்கம் போன்றவனே! நீல வண்ணக் கண்ணனே! நீ குடியிருக்கும் இவ் அரண்மனையை நாடி வந்துள்ளோம்.சிம்மாசனத்தில் வீற்றிருந்து நாங்கள் வந்த காரணத்தைக் கேட்டு நிறைவேற்றி அருள்வாயாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக