சுந்தரர் பதிகம் & பாடல்
திருச்சிற்றம்பலம்
திருமுறை : 7/93 பண் : பழம் பஞ்சுரம்
கொன்று செய்த கொடுமையால் பலசொல்லவே
நின்ற பாவவினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர்பிரானிட்ம்
கன்றினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. 1
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசைபாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவி தண்கழுக் குன்றமே. 2
நீளநின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திட
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காளகண்டன் உறையும் தண்கழுக் குன்றமே. 3
வெளிறுதீரத்தொழுமின் வெண்பொடி ஆடியை
முளிறிலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்
பிளிறுதீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக்
களிறினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. 4
புலைகள்தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப்படையன் எந்தை பிரானிடம்
முலைகளுண்டு தழுவிக் குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவின் தண்கழுக் குன்றமே. 5
மடமுடைய அடியார் தன்மனத்தே உற
விடமுடைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமுடைய அரவன் தான்பயிலும் இடம்
கடமுடைய புறவின் தண்கழுக் குன்றமே. 6
ஊனமில்லா அடியார் தன்மனத்தே உற
ஞானமூர்த்தி நட்டாடி நவிலும் இடம்
தேனும் வண்டும் மதுவுண்டு இன்னிசை பாடியே
கானமஞ்சை உறையும் தண்கழுக் குன்றமே. 7
அந்தமில்லா அடியார் தம்மனத்தே உற
வந்துநாளும் வணங்கி மாலோடு நான்முகன்
சிந்தைசெய்த மலர்களும் நித்தலும் சேரவே
கந்தம்நாறும் புறவின் தண்கழுக் குன்றமே. 8
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்சகன்
குழைகள்காதன் குழகன் தானுறையும் இடம்
மழைகள் சாலக்கலித்து நீடுயர் வேயவை
குழைகொள் முத்தம் சொறியும் தண்கழுக் குன்றமே. 9
பல்லில் வெள்ளைத் தலையன் தான் பயிலுமிடம்
கல்லில் வெள்ளை யருவித் தண்கழுக் குன்றினை
மல்லில் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின். 10
திருஇடையாறு
திருமுறை : 7/77 பண் : கொல்லி / பழஞ்சுரம்
பாடல் எண் : 4
கச்சையூர் காவங் கழுக்குன்றம் காரோணம்
பிச்சையூர் திரிவான் கூவூர் வடபேறூர்
கச்சியூர் கச்சிக்கல் நெய்த்தானம் மிழலை
இச்சையூர் எய்தமான் இடையாறு இடைமருதே.
%20of%20ep%20(1).jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக