திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர் பதிகம் & பாடல்கள்
திருக்கழுக்குன்றம் பதிகம்
திருமுறை: 6/92 அடைவுத் திருத்தாண்டகம்
இறைவர் : வேதகிரீசுவரர் இறைவி : பெண்ணின் நல்லாளமை:
மலைச் சொக்கநாயகி
மூவிலைவேல் கையானை மூர்த்திதன்னை
முதுபிணக்காடு உடையானை முதல் ஆனானை
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர்கோனை
ஆலாலமுண்டு உகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 1
பல்லாடுதலை சடைமேல் உடையன் தன்னைப்
பாய்புலித்தோல் உடையானைப் பகவன்தன்னைச்
சொல்லோடு பொருள னைத்தும் ஆனான் தன்னைச்
சுடருவில் என்பறாக் கோலத்தானை
அல்லாத காலனை முன் அடர்ந்தான்தன்னை
ஆலின்கீழ் இருந்தானை அமுது ஆனானைக்
கல்லாடை புனைந்து அருளும் காபாலியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 2
திருப்புகலூர் -பாடல்கள்
இறைவர் : அக்னீசுவரர் / கோணப்பிரான் இறைவி : கருத்தார்க்குழலியம்மை
திருமுறை: 4/16 பண்: இந்தளம்
பாடல் எண் : 4
புறம்பயத்து எம்முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளங்கும் ஞாயிற்றைக்
கற்ங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை
அறம்சூழ் அதிகைவீரட்டத்து அரிமானேற்றை அடைந்தேனே.
திருமுறை : 6/70 திருத்தாண்டகம்
பாடல் எண் : 2
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும்
ஆக்கூரில் தாந்தோன்றிமாடம் ஆவூர்
பேரூர் பிரம்மபுரம் பேராவூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும்
கூரார் குறுக்கை வீரட்டானமும்
கோட்டூர் குடமூக்குக் கோப்பமும்
காரார் கழுக்குன்றும் கானப்பேரும்
கயிலாய நாதனையே காணலாமே.
திருமுறை : 6/99 திருத்தாண்டகம்
பாடல் எண் - 7தேவார்ந்த தேவனைத் தேவரெ ல்லாம்
திருவடிமேல் அலரிட்டுத் தேடிநின்று
நாவார்ந்த மறைபாடி நட்டமாடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழில்சோலைக் கானப்பேராய்
கழுக்குன்றத்து உச்சியாய்க் கடவுளே நின்
பூவார்ந்த பொன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
திருநாரையூர்
திருமுறை : 6/74 திருத்தாண்டகம்
இறைவர்: சவுந்தரேசுவரர் இறைவி: திரிபுரசுந்தரி
பாடல் எண்- 4
செம்பொன்னை நன்பவளம் திகழ் முத்தைச்
செழுமணியை தொழுமவர்தம் சித்தத்தானை
வம்பவிழும் மலர்க்கணை வேளுலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற
கம்பனை எம் கயிலாய மலையான் தன்னைக்
கழுகினோடு காகுந்தன் கருதி ஏத்தும்
நம்பனை எம்பெருமானை நாதந்தன்னை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
செழுமணியை தொழுமவர்தம் சித்தத்தானை
வம்பவிழும் மலர்க்கணை வேளுலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற
கம்பனை எம் கயிலாய மலையான் தன்னைக்
கழுகினோடு காகுந்தன் கருதி ஏத்தும்
நம்பனை எம்பெருமானை நாதந்தன்னை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
திருப்புத்தூர்
திருமுறை : 6/76 திருத்தாண்டகம்
இறைவர் : புத்தூரீசர் / திருத்தளிநாதர் இறைவி : சிவகாமியம்மை
பாடல் எண் - 9
பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோருக்கும்
பராபரன்காண் தக்கன்றன் வேள்விச்செற்ற
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடக்கச்செற்று
ஞானத்தை மேன்மிகுத்தல் கேளாக் கொண்ட
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன்றத்தெம்
பிஞ்சகன் காண் பேரெழிலார் காமவேளைச்
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத்தூரில்
திருத்தளியான்காண் அவனென் சிந்தையானே.
திருவதிகை வீரட்டம்
திருமுறை : 6/07 காப்புத் திருத்தாண்டகம்
இறைவர் : வீரட்டேசுவரர் இறைவி : திரிபுரசுந்தரி
பாடல் எண் - 3
சிறையார் புனற்கெடில வீரட்டமும்
திருபாதிரிபுலியூர் திருவா மாத்தூர்
துறையார் வனமுனிகளேத்த நின்ற
சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும்
அரையார் புனலொழுகு காவிரிசூழ்
ஐயாற்று அமுதர் பழனம் நல்ல
கரையார் பொழில் புடைசூழ் கானப்போகும்
கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே.
திருப்பூந்துருத்தி
திருமுறை : 6/71 அடைவுத் தாண்டகம்
இறைவர் : புஷ்வனநாதர் இறைவி : அழகாலமர்ந்த நாயகி
கந்தமாதனங் லயிலைமலை கேதாரங்
காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா
மந்தமாம் பொழிசாரல் வடபற்பதம்
மகேந்திர மாமலை நீலம் ஏமக் கூடம்
விந்தமாமலை வேதஞ் சையம் மிக்க
வியன் பொதியில்மலை மேருவுதயம் அத்தம்
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெட நின்றேத்துவோமே.
%20of%20tu.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக