பட்டினத்தார்
11ம் திருமுறை / திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி
இறைத்தார் புரமெய்த வில்லிமை
நல்லிமவான் மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்றம் மன்னல் குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்
குன்றம் என் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர்
குன்றென்று கூறுமினே.
காடோ,செடியோ, கடற்புறமோ, கனமே மிகுந்த
நாடோ, நகரோ, நகர்நடுவோ, நலமே மிகுந்த
வீடோ, புறத்திண்ணையோ தமியேன் உடல் வீழுமிடம்
நீடோய் கழுக் குன்றிலீசா உயிர்த்துணை நின்பதமே.
சேக்கிழார் அருளிய பெரிய புராணம்
பனிரெண்டாம் திருமுறை
சுந்தரர் வருகை
தண்டகமாந் திருநாட்டு தனிவிடையார் மகிழ்விடங்கள்
தொண்டரெதிர் கொண்டணையத் தொழுபோய் தூயநதி
வண்டறை பூம்புறவு மளைவள மருதம் பலகடந்தே
எண்டிசையோர் பரவுதிருக் கழுக்குன்றை எய்தினார். 172
தேனார்ந்த மலர்ச்சோலைத் திருக்கழுக் குன்றத்தடியார்
ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்தருளி
தூநாள் வெண்மதியணிந்த சுடர்கொழுந்தைத் தொழுதிறைஞ்சிப்
பாநாடும் இன்னிசையின் திருப்பதிகம் பாடினார். 173
திருநாவுக்கரசர் வருகை
திருக்கச்சி ஏகம்பம் பணிந்தேத்தித் திங்களார்
நெருக்கஞ் சடைக்கணிந்தார் நீடுபதி தொழநினைவார்
வருக்கை செஞ் சுளைபொழிதேன் வயல் விளைக்கும் நாட்டிடைப்போய்
பருக்கைத்தின் களிற்றுரியார் கழுக்குன்றின் பாங்கணைந்தார். 329
நீடுதிருக் கழுக்குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப்
பாடுதமிழ்த் தொடைபுனைந்து பாங்குபல பதிகளிலுஞ்
சூடும் இளம் பிறைமுடியார் தமைத்தொழுது போற்றிப்போய்
மாடுபெருங் கடலுடுத்த வான்மியூர் மருங்கணைந்தார். 330
சம்பந்தர் வருகை
நிறைந்தாரா வேட்கையினால் நின்றிறைஞ்சிப் புறம்போந்தங்கு
உறைந்தருளிப் பணிகின்றாருமைப்பாகர் அருள்பெற்று
சிறந்ததிருத் தொண்டருடன் எழுந்தருளிச் செந்துருத்தி
அறைந்து அளிகள் பயில்சாரல் திருக்கழுக்குன்றினை
அணைந்தார். 1129
சென்றணையும் பொழுதின்கந்திருத்தொண்டர் எதிர்கொள்ளப்
பொன்றிகழும் மணிச்சிவிகை இழிந்தருளி உடன்போந்து
மன்றல்விரி நறுஞ்சோலைத் திருமலையை வலங்கொண்டு
மின்றயங்குஞ் சடையாரை விருப்பலுடன் பணிகின்றார். 1130
திருக்கழுக் குன்றத்தமர்ந்த செங்கனத் தனிக்குன்றைப்
பெருங்கவளர் காதலினால் பணிந்தெழுந்து பேராத
கருத்துடன் காதல்செய்யுங் கோயில் கழுக்குன்று என்று
திருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தைநிறை மகிழ்ந்தார். 1131
அருணகிரிநாதர் திருப்புகழ்
எழுகுநிறை நாபி அரிபிரமர் ஜோதி
இலகுமரன் மூவர் முதலானோர்
இறைவி எனும் ஆதி பரமுலையின் ஊறி
எழுமமிர்த நாறு கனிவாயா!
புழுகெழுகு காழி கவுணியரில் ஞான
புனிதனென ஏடு தமிழாலே !
புனலில் எதிர்ஏற சமணர்கழுஏற
பொருத கவிவீர குருநாதா !
மழு உழைக பால டமாக்தரி சூல
மணிகர விநோதர் அருள்பாலா !
மலர் அயனைநீடு சிறைசெய்தவன் வேலை
வளமை பெறவே செய் முருகோனே !
கழுகுதொழு வேதகிரி சிகரி கரிவீறு
கதிர் உலவு வாசல் நிறைவானோர்
கடலொலியதான தமிழ்மறைகள் ஓது
கதலிவன மேவு பெருமாளே !
அகத்தினைக்கொண் டிப்புவிமேல் சில
தினத்துமற்றொன் றுற்றறியாதுபி
வைத்துள் வைக்குங் சித்தசரனாரடு கணையாலே
யசுத்தமைக்கண் கொட்புறுபாவையர்
நகைதுரைக்கும் பொய்க்கடன் மூழ்கியெ
யலக்கணிற்சென்று றுத்தடுமாறியெ சிலநாள்போ
யிகத்தைமெய்க்கெண் டிப்புவி பாலர்பொன்
மயக்கிலுற்றம் பற்றைவிடாதுட
லிகளைப் பிரைப்பும் பித்தமுமாய்நரை முதிர்வாயே
யெமக்கயிற்றின் சிக்கினிலாமுனுள்
மலர்ப்பதத்தின் பத்திவிடாமன
திருக்கநற்றொண் டர்க்ணையாகவு னருடாராய்
புகழ்ச்சிலைகந் தர்ப்பனுமேபொடி
படைசிரித்தன் முப்புரநீறுசெய்
புகைக்கனற்கண் பெற்றவர்காதலி யருள்பாலா
புவிக்குளுத்தம் புத்திரர்சேயர
சனைத்துமுற்றுஞ் செற்றிடவேபகை
புகட்டிவைக்குஞ் சக்கரபாணிதன் மருகோனே
திகழ்கடப்பம் புஷ்பமதார்புய
மறைத்துறுகொண் டற்புதமாகிய
தினைபுனத்தின் புற்றுறைபாவையை யணைசீலா
செகத்திலுச்சம் பெற்றமராவதி
யதற்குமொப்பென் றுற்றழகேசெறி
திருக்கழுக்குன் றத்தின்மேவிய பெருமாளே !
இலகுமரன் மூவர் முதலானோர்
இறைவி எனும் ஆதி பரமுலையின் ஊறி
எழுமமிர்த நாறு கனிவாயா!
புழுகெழுகு காழி கவுணியரில் ஞான
புனிதனென ஏடு தமிழாலே !
புனலில் எதிர்ஏற சமணர்கழுஏற
பொருத கவிவீர குருநாதா !
மழு உழைக பால டமாக்தரி சூல
மணிகர விநோதர் அருள்பாலா !
மலர் அயனைநீடு சிறைசெய்தவன் வேலை
வளமை பெறவே செய் முருகோனே !
கழுகுதொழு வேதகிரி சிகரி கரிவீறு
கதிர் உலவு வாசல் நிறைவானோர்
கடலொலியதான தமிழ்மறைகள் ஓது
கதலிவன மேவு பெருமாளே !
அகத்தினைக்கொண் டிப்புவிமேல் சில
தினத்துமற்றொன் றுற்றறியாதுபி
வைத்துள் வைக்குங் சித்தசரனாரடு கணையாலே
யசுத்தமைக்கண் கொட்புறுபாவையர்
நகைதுரைக்கும் பொய்க்கடன் மூழ்கியெ
யலக்கணிற்சென்று றுத்தடுமாறியெ சிலநாள்போ
யிகத்தைமெய்க்கெண் டிப்புவி பாலர்பொன்
மயக்கிலுற்றம் பற்றைவிடாதுட
லிகளைப் பிரைப்பும் பித்தமுமாய்நரை முதிர்வாயே
யெமக்கயிற்றின் சிக்கினிலாமுனுள்
மலர்ப்பதத்தின் பத்திவிடாமன
திருக்கநற்றொண் டர்க்ணையாகவு னருடாராய்
புகழ்ச்சிலைகந் தர்ப்பனுமேபொடி
படைசிரித்தன் முப்புரநீறுசெய்
புகைக்கனற்கண் பெற்றவர்காதலி யருள்பாலா
புவிக்குளுத்தம் புத்திரர்சேயர
சனைத்துமுற்றுஞ் செற்றிடவேபகை
புகட்டிவைக்குஞ் சக்கரபாணிதன் மருகோனே
திகழ்கடப்பம் புஷ்பமதார்புய
மறைத்துறுகொண் டற்புதமாகிய
தினைபுனத்தின் புற்றுறைபாவையை யணைசீலா
செகத்திலுச்சம் பெற்றமராவதி
யதற்குமொப்பென் றுற்றழகேசெறி
திருக்கழுக்குன் றத்தின்மேவிய பெருமாளே !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக