சொல்லுக் கினிய கழுக்குன்றீரே உமைச் சொல்லவென்றால்
அல்லல் பிழைப்பு பிழைத்து விட்டீர் முப்புராதியர்மேல்
வில்லைக் குனிந்து எய்யாமாட்டாமல் நீரிந்த வேளைதனில்
பல்லைத் திறந்துவிட்டீர், இதுவோ நும் படைத்தொழிலே?
[ இப்பாடல் நிந்தாஸ்துதி எனப்படும். அதாவது ஒருவரை இகழ்வது போல புகழ்ந்து பாடுவதாகும். முப்புராதியரை அழிக்க ஈசனார் முற்பட்டார். பிரமன், திருமால், இந்திரன் முதலிய தேவர்கள் அவருடைய தேர், மற்றும் ஆயுதங்களாகி அவருடன் சென்றனர்.தேவர்கள், சிவனுக்குத் தங்களுடைய
உதவியிருப்பதாலேயே முப்புராதியருடன் போருக்குச் செல்ல முடிகிறது என
எண்ணி கர்வம் கொண்டனர். அதனையுணர்ந்த சிவன் வில்லை வளைத்தார் நாணேற்றினார். ஆனால் அம்பு எய்யவில்லை. வாய்விட்டுச் சிரித்தார்.
முப்புராதியர் நெருப்பாலேயே எரிந்தழிந்தனர்.
விளக்கம் : சொல்லுக்கினிமையான கழுக்குன்றினில் இருக்கின்ற வேதகிரீசப் பெருமானே ! தாங்கள் தவறான ஒரு செயலைச் செய்துவிட்டீர். முப்புராதியரை எதிர்த்துப் போரிடவந்த நீர் வில்லை வளைத்து நாணேற்றினீர். அடுத்து அம்பு எய்ய வேண்டிய நேரத்தில் அம்பை எய்யாமல் பல்லைத் திறந்து சிரித்தீர். அதனாலேயே முப்புராதியர் எரிந்தழிந்தனர். இதுவா உம்முடைய போர்த் திறன்?
திருக்கழுக்குன்ற தலபுராணம்
அந்தகக்கவி வீரராகவர்
மண்தலத்தில் நாளும் வயித்தியராய்த் தாமிருந்து
கண்டவினைத் தீர்க்கின்றார் கண்டீரோ?தொண்டர்க்கு
விருந்து கொடுக்கின்றான் வேதகிரி ஈசன்
மருந்து கொடுக்கின்றான் மண்.
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே.
இப்பாடலில் காணி என ௧௮ முறை வருகிறது. இதனுடன் கால், முக்கால் மற்றும் நால் என்றால் ௨ (இரண்டு) ஆக மொத்தம் இருபது௦ ௦ காணி வருகிறது . தமிழ்க் கணக்கில்காணி என்றால் என்பதில் ஒரு பாகம் என்பார்கள். அதனால் இருபது காணி என்றால் கால் என்று வருகிறது. இறைவனின் திருவடியைக் காண (காலைக் காண) வேண்டுமானால் கழுக்குன்றம் வாருங்கள் என்றழைக்கிறார் புலவர்.
குறிப்பு: இறைவனுடைய திருப்பாதத்தை திருப்பெருந்துறையில் பெற்ற மாணிக்கவாசகர் அத்திருவடிகளை இங்கு (திருக்கழுக்குன்றத்தில்) வைத்து காணொணாத் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு.
தருமை ஆதீன முதற் குருமணி திருஞானசம்பந்தர் அருளிய சிவபோக சாரம்
தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் - நெல்களர்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடு அருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.
ஒட்டக்கூத்தர்
அப்பாழி மூழ்கியொரு கற்பகாலம்
கிடக்கினுமென்? அழலின் நின்று
வெம்பாமே வெளிக்கால் உண்(டு) உட்காலை
வெளியில் விடா(து) இருந்தா யென்னே?
வம்ப்பாடும் இதழியணி வேணியார்
வேதமலை வலம் வந்(து) ஈண்டும்
சம்பாதிக்(கு) அமுதளிக்கும் சயகுந்தம்
போல் வினவத் தாரா அன்றோ !
திருக்கழுக்குன்றம் சிலேடை வென்பா [காஞ்சிபுரம் சபாபதி முதலியார் ]
கொன்றை மரத்தைக் கொடிபடர்ந்து சுற்றிமறிக்
கன்றுடையான் போலாங் கழுக்குன்றே ! - துன்றுதிரு
நாவண் கரந்த னலவரக் கங்கனஞ்சேர்
பூவண் கரத்தான் பொருப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக