திருவெம்பாவை - ஏழாம் பாடல்
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்நெஞ்சம் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்
தேவர்கள் பலராலும் நினைப்பதற்கு அறியவனும் ஒப்புயர்வற்றவனும், பெருஞ்சிறப்பு உடையவனும் ஆகிய சிவவ்ன் வருவதற்குரிய அடையாளமாகிய் எக்காளதின் ஊதுலொலி கேட்டவுடனே சிவ என்று நீ வாய்திறப்பாயே.தென்னாயென்று அவன் பெயரைச் சொல்லுதற்கு முன்பே தீயிலிட்ட மெழுகுபோல் மனம் உருகுவாயே! அப்படிப்பட்ட உன்முன்னிலையில் என்னியவன் என்றும், என்னரசனென்றும், இன்னமுதனென்றும் நாங்கள் எல்லாரும் சொன்னோம். அவையெல்லாம் கேட்டும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயா? கல்நெஞ்சத்தை உடைய அறிவிலிகள் போல் நீ உணர்ச்சி அற்று. கிடக்கிறாயே! அம்மா, இப்படிய்ம் சில இயல்புகள் உன்னிடம்
இருக்கின்றனவோ?
திருப்பாவை - எழாம் பாடல்
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
விடியலில் பறவைகளின் கீசு, கீசுயென்ற ஓசையும், மக்களின் பேச்சொலியும், ஆய்ச்சியர் மத்தினால் தயிர்க் கடையும் ஓசையும் கேட்கவிலையோ? நாராயணனைக் கேசவனைப் புகழ்ந்து பாடவும் கேட்டே தூங்குகிறாயா? அன்புடையவளே வெளியே வந்து கதவைத் திறப்பாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக