கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெள்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங் கருணை
கேழில் விழுப்பொருள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீது என்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.
கோழிகள் கூவுகின்றன. பறவைகள் ஏழிசை போன்று ஒலிக்கின்றன. வெள்ளைச் சங்குகள் முழங்குகின்றன. சிவனை, உவமையில்லாத மேலான ஜோதி - கருணை - மேலான பொருள் - என்றெல்லாம் நாங்கள் பாடுகிறோம்.நீ இவற்றையெல்லாம் கேட்டில்லையோ? வாழ்க நீ! இது என்ன உறக்கமோ? கருணைக் கடலாகிய சிவனிடத்து அன்பு வைப்பது இப்படியா? ஊழிகாலத்தில் எஞ்சியிருப்பது அவன் ஒருவனே. உமைப்பாகனது பெருமையைப் பாடுகிறோம் ஏற்றுக்கொள்வாயாக.
திருப்பாவை - எட்டாம் பாடல்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
இப்பாடலிலும் கண்ணனது இளமைக் கால இருநிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. குதிரை வடிவில் வந்த கேசி என்ற அரக்கனையும், கண்ணனுடன் போர்புரிந்து அழிக்க வந்த இரு மல்லர்களைய்ம் அழித்தவன் கண்ணன்.
கீழ்வானம் வெளுக்கலாயிற்று. எருமைகள் மேய்ச்சலுக்கு செல்லத் துவங்கிவ்ட்டன.மற்ற தோழியர் நீராடச் செல்ல உள்ளனர். அவர்களைச்செல்லவிடாது காத்து வந்துன்னை எழ்ப்புகிறோம்.எழுந்திருப்பாயாக.தேவர்க்கெல்லாம் தேவனான நாராயணனைப் பாடிச் சென்று வணங்கினால் அவன் ந்மக்கருள்வான்.பாவையே எழுந்த்ருப்பாயாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக