வெள்ளி, 18 டிசம்பர், 2009

பாவை நோன்பு-தொடர்ச்சி - [03]

திருவெம்பாவை-மூன்றாம் பாடல்


முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்று உள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழாடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற்பொல்லாதே
எந்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ ந்ம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமகேலோர் எம்பாவாய்
.

முத்துப் போன்ற வெண்பற்களையுடையாய், எல்லோர்க்கும் முன்னே வந்து எதிரில் எழுந்து நின்று எந்தந்தை, ஆனந்தன்,அமுத வடிவவமானவனே,என்ரு வாயால் சொல்லி, வாயூற இனிய பேச்சுப் பேசுவாய். அப்படிப்பட்ட நீ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாய். எழுந்து வந்து உன் வீடுக் கதவைத் திறப்பாயாக.

அதற்கவள் கூறுகிறாள்: நீங்கள் பக்க்தி நிறைந்தவர்கள்.ஈசனுக்கு நெடிது அன்புடையீர்கள். நாங்களோ புதியதாக அடிமை பூண்டவ்ர்கள். எங்களது குறைகளை கொள்ளாது எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொண்டால் தீங்கேதும் விளையுமோ?

வந்தவர்கள்: எங்களை ஏமாற்றப் பார்க்கிறாயா? இறைவனிடம் நீ கொண்டுள்ள அன்பின் பெருக்கத்தை நாங்களறியோமோ?

மனப்பக்குவம் பெற்றவர்கள் நம் சிவனைப் போற்ரிப் பாடுவார்களலவா? நமக்கிடையே ஒத்த நட்பும், சிவபக்க்தியும், பேரூக்கமும் தேவை. பாவை போண்ற பெண்ணே இத்தகு கொள்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, அவற்றை எண்ணிப் பார்.


திருப்பாவை - மூன்றாம் பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

[பாவை நோன்பிருப்பதால் கிடைக்கும் பயன்களை இப்பாடலில் காணலாம்.]

இவ்வுலகையெல்லாம் தன்திருவடியால் அளந்த உத்தமனாகிய திருமாலை, கண்ணனைப் பாடி பாவை நோன்பிருந்தால்,
(01) நாடெங்கும் மாதம் மூன்று மழை தவறாமல் பெய்யும்.
(02) மழை தவறாது பெய்வதால் வயல்களில் செந் நெல் விளைகிறது.
வயலில் உள்ள நீரில் உள்ள கயல்மீன்கள் சேற்றை கலக்கிக்
கொண்டுள்ளன. [ நில வளமும் - நீர் வளமும் நிறைந்திருக்கும் ]
(03) கருங்குவளை பூக்களின் மொக்குகளில் புள்ளிகளை உடைய வண்டு
-கள் உறங்கிக்கொண்டிருக்கின்றன. [வண்டுகள் மரந்தச்சேர்க்கைக்கு
உதவுகின்றன]
(04) பசுக்களெல்லாம் வள்ளல்களைப்போன்று குடம்குடமாகப் பாலைத்
தருகின்றன. [ பால் வளம்]
(05) நாட்டில் செல்வம் நீங்காதிருக்கும்.
மன்னன் மாபலிக்கு திருமால் வாமனன் வடிவில் அருள்மழையை அருளினாரோ அவ்வாறே அவரின் பக்க்தர்களுக்கு அருளுவார்.






கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1