திங்கள், 4 ஜனவரி, 2010

பாவை நோன்பு - தொடர்ச்சி - (௦11)





திருவெம்பவை - பதினொன்றாம் பாடல்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன்கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போல்
செய்யா வெண்ணீறாடிசெல்வா சிறுமருங்குல்
மையார் தடம் கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆள்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.


மார்கழி நீராடக் கூடியுள்ள நாங்கள், ஆழ்ந்து அகன்ர சுனையில் மூழ்கை எழுந்து உன் திருவடிகளைப் பகழ்ந்து பாடினோம்.நாங்கள் வழிவழியாக உனக்கு அடிமைப் பட்டோம். உன்ன்ருளால்வாழ்ந்து வருகிறோம். செந்நிற மேனியை உடையவனே1 திருநீற்றை அணிந்தவனே!திருவருட் செல்வனே! உமையம்மையின் மணாளனே! தலைவனே! நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடல் புரிபவனே!

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1