திங்கள், 4 ஜனவரி, 2010

பாவை நோன்பு - தொடர்ச்சி - (௦12)

திருவெம்பாவை - பனிரெண்டாவது பாடல்


ஆர்த்த பிறவித்துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணிகுழல் மேல்வண்டு ஆர்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன்பாதம்
ஏத்தி இரும்சுனை நீராடேலோர் எம்பாவாய்.


நம்மைக் கட்டியுள்ள பிறவியாகிய துன்பம் நீங்கட்டும்.விண்ணையும், மண்ணையும் ஆகிய அனைத்தையும் படைத்து, காத்துப்பின் அழித்தலை விளையாட்டாகச் செய்பவனின் புகழைச் சொல்லி, நீராடி,இறைவனது பொன்னடியைத் துதித்து சுனை நீரில் மூழ்குவோமாக. 


திருப்பாவை - பனிரெண்டாம் பாடல்


கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இறங்கி 
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி
சினத்தினால் தென்யிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு  இனியானைப் பாடவும் நீ வாய் திற்வாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


தன் கன்றுகளுக்கு இரங்கி எருமைகள் தானாகவே பாலைச் சொரிவதனால் வெள்ளக் காடானது. அப்ப்டிப் பட்ட பால்வளம் மிக்கவனின் தங்கையே! மார்கழிப் பனி தலையில் கொட்டவும், வைராகியமுடைய பெண்கள் இலங்கை வேந்தனைக் கொன்றவனும், மனதிற்கு இனியவனுமான ராமனின் புகழை பாடி மகிழ்கிறார்கள்.ஆனால் நீ மட்டும் ஏனோ பேருறக்கத்தில் கிடக்கிறாய்.


கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1