திருவெம்பாவை - பதின்மூன்றாம் பாடல்
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போற்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தா டேலோர் எம்பாவாய்.
பொய்கையிலே குவளை மலர்கள் பூத்துள்ளன.செந்தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன. நீர்ப் பறவைகள் சப்தம் செய்கின்றன.நீர்ப் பாம்புகள் நெளிந்து ஓடுகின்றன. இத்தகு காரணங்களால் அத் தடாகம் சிவ சக்தி சொரூபமாகத் தென்படுகிறது. {செந்தாமரை - சிவனது மேனி; கருங்குவளை மலர்கள் - அம்பிகை வடிவம்; பாம்புகள் ஆங்கங்கே நெளிகின்றன; தடாகம் அர்த்த நாரீஸ்வரர் போன்றுள்ளது}
அதில் நாம் குதித்து நீராடுவோமாக.
திருப்பாவை - பதின்மூன்றாம் பாடல்
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி எழுந்தது விழாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்.
பறவையின் வடிவில் வந்த பகாசுரனின் வாயைக் கிழித்தவனும்,பொல்லாத அரக்கனாகிய இராவணனின் தலைகளைக் கிள்ளி எறிந்தவனுமான் திருமாலைப் போற்றிப் பாடிக் கொண்டே பெண்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.பறவைகள் இறைதேடக் கூவிச் செல்கின்றன.இந்நன்னாளில் உடலும், உள்ளமும் குளிர நீராட வேண்டாமா? கண்ணனை தனியாக எண்ணுவதே சுகமென்று தூக்கத்தில் கிடக்கும் கள்ளத்தனத்தை விட்டு விட்டு
எங்களோடு வந்து சேர்ந்துகொள்வயாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக