திங்கள், 4 ஜனவரி, 2010

பாவை நோன்பு - தொடர்ச்சி - (௦14)






திருவெம்பாவை - பதினான்காம் பாடல்
காதார் குழையாடப் பைம்பூன் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ் கொன்றைத் தார்பாடி
ஆதி திறம் பாடி அந்தமாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பெண்கள் , தாங்கள் நீராடும்விதம் பற்றி இப்பாடலில் விளக்குகிறார்கள். காதில் அணிந்துள்ள தோடுகள் ஆடவும், அணிந்துள்ள அணிகலன்கள் ஆடவும், பூக்கள் சூடிய கூந்த்ல் ஆடவும், அப்பூகளை நாடிவந்த வண்டின் கூட்டம் ஆடவும்,நாம் குளிர்ந்த நீரில் மூழ்கி நீராடுவோம்.பின் சிற்றம்பலத்தானைப் பாடுவோம்.  வேதம் அவ்னை விளக்குகிறது.நாம் அவனை அடைய வேண்டும். அவன் ஞானஜோதிமயமானவன். அவன் கொன்றை மாலையை அணிந்திருப்பவன். உலகின் மூலப் பொருளாய் இருந்தவன் சிவனே. உலகமே அழிந்தாலும் அவனுக்கு அழிவில்லை. முதற் பொருளும், இறுதிப் பொருளும்  இறைவனே. நம்மை பிரபஞ்சத்தினிடமிருந்து வேறு படுத்திக் காப்பாற்றி அருளுகின்ற அன்னை பராசக்தியின் மகிமையைப் பாடவும் ஆடவும் செய்வோமாக.


திருப்பாவை - பதினான்காம் பாடல்


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானை பாடேலோர் எம்பாவாய்


கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1