முன்னிக்கடலைசுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தமை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
இப்பாடலில் மழையின் தோற்றம்,செயல் இவற்றை அம்மையின் தோற்றம்,செயலோடு ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.
(1) மேகமானது கடல்நீரைக் குடித்து மேலே கிளம்பி உமையம்மையின் கருமை நிறத்தைப் பெறுகிறது.
(2) அம்மையின் இடை மின்னலை ஒத்துள்ளது.
(3) தேவியின் திருவடியில் பொற்சிலம்பு ஒலித்தது இடியிடிப்பது போன்றது.
(4) வானவில் போல் அம்பிகையின் புருவம் இருந்தது.
எனவே, மழையே எம்மை ஆளுடையாளாகிய அம்பிகையின் பாகன் சிவனின் அன்பர்க்கு முதலில் பெய்துவிட்டு,பின் எமக்குப் மழையாகப் பொழிவாயாக.
திருப்பாவை - பதினாறாம் பாடல்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாதிறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
தேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
எங்கள் தலைவன் நந்தகோபனின் அரண்மணையைக் காப்பவனே!மங்கலத் தோரணங்கள் கட்டப் பட்டுள்ள வாயிலைக் காப்பவனே!கதவுகளைத் திறப்பாயாக. ஆயர் சிறுமிகளான எங்களுக்கு கண்ணன் இசைக்கும் கருவியை
தருவதாக நேற்றே வாக்களித்திருக்கிறான். பள்ளியெழுச்சி பாடி கண்ணனை எழுப்புவதற்காக இங்கே கூடி நிற்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக