புதன், 6 ஜனவரி, 2010

பாவை நோன்பு - தொடர்ச்சி - (௦19)




திருவெம்பாவை
 பத்தொன்பதாம் பாடல்


உன்கையில்பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் 
எங்கள்பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல் 
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.                                                                                                                                        உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற அப்பழமொழியைப் புதுப்பிக்க அஞ்சுகிறோம்.ஏனெனில் அது தேவையில்லை. எம்பெருமானே,உனக்கு ஒன்று சொல்கிறோம் ,கேள். நாங்கள் உன் மெய் அன்பர்களையே மணப்போம். நாங்கள் உனக்கே பணிசெய்வோம்.இரவும், பகலும் உன்னையே எங்கும் காணவேண்டும். இவ்வாய்ப்பை இறைவா, நீ எங்களுக்குக் கொடுத்தருள்வாயாகில் பின் சூரியனே திசை மாறிப் போனாலும்
அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. 


கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1