திருவெம்பாவை -
இருபதாம் பாடல்
போற்றி அருளுக நின்னாதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின்னந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொன்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணா புண்டரிகம்
போற்றி யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
அனைத்துக்கும் முந்தியிருக்கும் உன்னைப் போற்ருகிறோம், அருள் புரிவாயாக. அனைத்துக்கும் முடிவாயிருக்கும் உன்னைப் போற்றுகிறோம்,அருள்வாயாக.உயிர்கள் அனைத்திற்கும் பிறப்பிடமாய் இருக்கும் உன்னைப் போற்றுகிறோம். உயிர்களுக்கு இருப்பிடமாயிருந்து இன்பம் ஊட்டும் உன்னைப் போற்றுகிறோம்.உயிர்கள் அனைத்திற்கும் ஒடுங்குமிடமாயிருக்கும் உன்னைப் போற்றுகிறோம்.திருமாகுக்கும்,பிரம்மனுக்குமே விளங்காது மறைந்திருக்கும் உன்னைப் போற்றுகிறோம்.என்களை ஆட்கொண்டு அருள்புரியும் உன்னைப் போற்றுகிறோம். நான்கள் மார்கழி நீராட அருள்புரிந்த உன்னைப் போற்றுகிறோம்.
திருப்பாவை-இருபதாம் பாடல்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
முப்பத்து முக்கோடி தேவர்களையும் காக்கும் வகையில் விரோதிகளை அழிப்பதற்காக, தானே வலிய முன் சென்று அவர்களது நடுக்கத்தைப் போக்கியவனே. வல்லமை கொண்டவனே! நீ தூக்கத்தைவிட்டு எழுக. அடியவர்க்கு குளிர்ச்சி உடையவனே! பகைவர்களை வெம்மையாகச் சுட்டெரிப்பவனே.நப்பின்னைப் பிராட்டியே! திருமகளே! தூக்கம் கலைந்து எழுவாயாக.மங்கலப் பொருள்களான விசிறியையும், கண்ணாடியையும் காட்டி உன் மணாளனான கண்ணனை இப்போதே எழுப்புவாயாக. கண்ணனை எங்களுடன் சேர்த்து நீராட அருள்வாயாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக