புதன், 6 ஜனவரி, 2010

பாவை நோன்பு - தொடர்ச்சி - (௦21)








திருப்பள்ளியெழுச்சி - முதல் பாடல்




போற்றி என்வாழ் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூம்கழற்கு இணைதுணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும்
எழில் நகை கொண்டு நின்திருவடி தொழுகோம் 
சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
ஏறு உயர் கொடி உடையாய் எனை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.




திருப்பாவை - இருபத்தொன்றாம் பாடல்


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் 
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்றாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பனியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.




கேட்டதும் வழங்கும் வள்ளலைப் போல, பெரிய பசுக்கள் கறக்கும் பாலைக் கொண்ட பாத்திரங்கள் எல்லாம் நிறந்து பொங்கி வழிகின்றன. இப்பசுக்களைப் பெற்றிருக்கும் நந்தகோபனின்மகனான கண்ணனே! தூக்கத்திலிருந்து எழுவாயாக.உலகினர் அனைவரும் காணும் படியாக சுடர் வடிவாய் நின்ற ஒளிவடிவே! தூக்கம் கலைந்து எழுவாயாக. உன்வலி கண்டு பயந்த பைகவர்கள், உன்வாசலில் வந்துன் திருவடிகளைப் பணிந்து கிடப்பது போல, நாங்களும் உன்புகழைப் பாடி வந்துன் வாசலில் காத்து கிடக்கிறோம்.






என் உயிர்க்கு உயிரே, உனக்கு வணக்கம். பொழுது விடிந்தது. உன் பாத மலர்களூக்கு ஒத்த மலர் தூவுகிறேன். அருளுக்கு அறிகுறியாக உன் முகவிலாசம் புன்னகை பூக்கிறது. அதற்கு வசப்பட்டு உன்னை போற்றுகிறோம். காளைக் கொடியை நீ உயர்த்திப் பிடித்துள்ளாய்.நீ என்னை
உடையவன். தூக்கம் கலைந்துஎழுந்திருப்பாயாக.



கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1