வியாழன், 7 ஜனவரி, 2010

பாவை நோன்பு - தொடர்ச்சி - (௦22)





திருபள்ளியெழுச்சி - இரண்டு
ருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்துருளாயே.


 [  அருணன் - சூரியன்,சூரியனுடைய சாரதி; இந்திரன் திசை - கிழக்கு; அறுபதம் - ஆறுகால்களையுடைய வண்டு]
  சூரியன் கிழக்கே வர இருள் எஇங்கிற்று. சூரிய உதயத்திற்கேற்ப உன் முகத்தில் கருணை பொழிக. பூக்கள் பூப்பதைப் போன்று உன் கண்கள் துயில் எழுக. வண்டுகள் ரீங்காரமிடுவது போல நாங்கள் உன்னைப் போற்றுகிறோம்.
இதில் இறைவனே நீ திரு உள்ளம் செலுத்துக.ஆனந்த மலையே! பேரின்ப கடலே ! பள்ளி எழுந்தருள்க. திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவனே! பிறவிப்பிணி நீங்க அர்ள் செய்யும் பேரிண்ப மலையே! ஞானக் கடலே! திருப் பள்ளியிலிருந்து எழுந்து அருள்க.  


திருப்பாவை - இருபத்திரெண்டாம் பாடல்


அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழ்
சங்க மிருப்பார்போல் வந்து தலப் பெய்தோம்
கிங்கினி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.


கண்ணா! பரந்த இப்பூமியை ஆளும் மன்னர்கள் எல்லாம் தங்களின் ஆடம்பரத்தை எல்லாம் விட்டுவிட்டு, உன் பள்ளி எழுச்சியைக் காண உன்  காட்டிலின் கீழே கூட்டமாக கூடி இருக்கிறார்கள்.அவர்களைப் போல் நாங்களும் கூடி நிற்கிறோம். மலர்ந்த தாமரை போலும் சிவந்துள்ள கண்களை மெல்ல திறந்து எங்களைப் பார்ப்பாயாக.பின் வானில் சந்திர, சூரியர் எழுந்து வருவது போல, உன் அழகிய இரு கண்களால் எங்களை முழுமையாகப் பார்ப்பாயாக.  நாங்கள் அனுபவிக்க இருக்கும் முற்பிறவி பாவங்கள் எல்லாம் மறைந்து ஓடிவிடும்.



   








கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1