திருப்பள்ளியெழுச்சி - ஆறாம் பாடல்
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்த்ருளாயே
எம்பெருமானே! உமையம்மையின் மணாளனே!திருபெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! உன்னடியார் பலர் தம் பிறவிப் பெரும் கட்டினை அறுத்தெரிய உன்னை வந்து தொழுகின்றனர். மகளீர் சிலரும் உன்னை வந்து வணங்குகின்றனர். எங்களுடைய இப்பிறப்பென்னும் கொடுங் கட்டினை அறுத்தெறிந்து, எம்மை ஆண்டு கொள்வாயாக.
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோலவிளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
பேரழகு கொண்டவனே! நீல மணிபோல் மேனி வண்ணம் கொண்ட கண்ணனே! பாவை நோன்பிற்குத் தேவையான பொர்ள்களை எல்லாம் கேட்டருள்வாயாக. இவ்வுலகை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில் முழங்குகின்ற பால்போல் வெண்ணிறமுடைய பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாகிய பெரும்பறை வாத்தியம், பல்லாண்டு பாடும் கூட்டம், அழகிய மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானம் ஆகியவற்றைத் தருவாயாக. ஊழி வெள்ளத்தில் ஆலிலையின் மேல் துயில் கொண்ட மாதவனே!நாங்கள் வேண்டியதை அருள் செய்யவேண்டும்.
எம்பெருமானே! உமையம்மையின் மணாளனே!திருபெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! உன்னடியார் பலர் தம் பிறவிப் பெரும் கட்டினை அறுத்தெரிய உன்னை வந்து தொழுகின்றனர். மகளீர் சிலரும் உன்னை வந்து வணங்குகின்றனர். எங்களுடைய இப்பிறப்பென்னும் கொடுங் கட்டினை அறுத்தெறிந்து, எம்மை ஆண்டு கொள்வாயாக.
திருப்பாவை - இருபத்தாறாம் பாடல்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோலவிளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
பேரழகு கொண்டவனே! நீல மணிபோல் மேனி வண்ணம் கொண்ட கண்ணனே! பாவை நோன்பிற்குத் தேவையான பொர்ள்களை எல்லாம் கேட்டருள்வாயாக. இவ்வுலகை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில் முழங்குகின்ற பால்போல் வெண்ணிறமுடைய பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாகிய பெரும்பறை வாத்தியம், பல்லாண்டு பாடும் கூட்டம், அழகிய மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானம் ஆகியவற்றைத் தருவாயாக. ஊழி வெள்ளத்தில் ஆலிலையின் மேல் துயில் கொண்ட மாதவனே!நாங்கள் வேண்டியதை அருள் செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக