வெள்ளி, 29 ஜனவரி, 2010

பாவை நோன்பு - தொடர்ச்சி - (௦27)


திருப்பள்ளியெழுச்சி-ஏழாம் பாடல்

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
           கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
           எங்களை ஆண்டுகொண்டி ங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
            மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
            எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

எம்பெருமானே!  தேன் சொரிகின்ற மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்துள்ள உத்தரகோசைமங்கைஎன்னும் ஊரிலுள்ளவனே! திருபெருந்துறை மன்னவனே! சிவம் என்பது பழச்சுவை என்றும், அமுதம் எனவும், அறிவதரற்கு அறிதெனவும், அன்பரால் அறிவதற்கு எளிதானது எனவும்,என் பலவாறு எண்ணி, ஒருமுடிவிற்கு வரவியலாது தேவரும் மயங்குவர். இதுதான் அவனுருவம்; இவந்தான் சிவன் என் நாங்கள் உணர்ந்து கொள்ள எங்கள்முன் வந்து எங்களை ஆண்டுகொண்டு, இவ்விடம் எழுந்தருளியுள்ள எங்கள் பெருமானே!எங்களுக்கு நீதான் ஏவுகின்ற பணியும் தான் ஏதோ?அதனை கேட்கவே உன் முன்னர் கூடியுள்ளோம். திருப்பள்ளி எழுந்தருள்வாயே.


திருப்பாவை - இருபத்து ஏழாம் பாடல்

கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா! உந்தன்னைப்
                பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக 
               சூடகமே தோள்வளையே, தோடே, செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
               ஆடை உடுப்போம் அதன்பின்னே  பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவார
               கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே! நாட்டிலுள்ளவர் கொண்டாடும்படியாக சூடகமும், தோள்வளையும், தோடும், செவிப்பூவும், பாடகமும் ஆகிய அணிகலண்களை நீ அணிவிக்க, நாங்கள் அணிந்து கொள்வோம். அதன் பின் பட்டாடைகளை உடுத்திக் கொள்வோம். பின் பாற்சோறை மறைக்குமளவு நெய்யை வார்த்து அதை முழங்கை வழியுமாறு  உண்போம். உன்னைப் பாடி நோன்புக்கு வேண்டிழ பறையைப் பெற்று விரதம் முடிப்போம்.


கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1