வியாழன், 11 பிப்ரவரி, 2010

திருக்கழுக்குன்றப் திருப்பதிகங்கள்


திருச்சிற்றம்பலம்
திருஞான சம்பந்தர்
திருமுறை: 1 /௧௦௩  பண்: குறிஞ்சி   இராகம்: சுருட்டி, எதுகுல காம்போதி
இறைவர் : வேதகிரீசுவரர்               இறைவியர்:  திரிபுரசுந்தரி/பெண்ணின் நல்லாளம்மை

தோடுடையான் ஒருகாதில் தூய குழை தாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துன்னும்
நாடுடையான் நள்ளிருள் ஏமநடமாடும்
காடுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.           1

கேனவல்லான் கேழல் வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடை மேலோர் புனல் கொன்றை
பேனவல்லான் பெண்மகள் தன்னை ஒருபாகம்
காணவல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.       2

தேனகத்தார் வண்டது உண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.             3

துணையல்செய்தான் தூயவண்டி யாழ்செய் சுடர் கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல்செய்யா இலங்கெயில் மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 4


பையுடைய பாம்பொடு நீறு பயில்கின்ற 
மெய்யுடையான் வெண்பிறை சூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்று அண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.             5

வெள்ளமெல்லாம் விரிசடை மேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழல் ஏத்தும் சிறுதொண்டர் 
உள்ளமெல்லாம் உள்கிநின்று ஆங்கே உடனாடும்
கள்ளம்வல்லான் காதல்செய் கோயில்  கழுக்குன்றே. 6 - 7

ஆதல்செய்தான் அரக்கர்தங்  கோனை அருவரையின் 
நோதல்செய்தான் நொடிவரையின் கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள் தன்னோடு ஒருபாகம்
காதல்செய்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.        8

இடந்தபெம்மான் ஏனம தாயும் அனமாயும்
தொடர்ந்த பெம்மான் தூமதிசூடி வரையர்தம் 
மடந்தைபெம்மான் வார்கழல் ஒச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.         9

 
தேயநின்றான் திரிபுரம் கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்து ஏத்த உலகெலாம் 
சாயநின்றான் வன்சமண் குண்டர் சாக்கீயர் 
காயநின்றான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.             10 

கண்னுதலான் காதல்செய் கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பால் பாடிய பத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவ ரோடும் புகுவாரே.                        11

                       திருச்சிற்றம்பலம்








கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1