திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தர்
சீர்காழி
திருமுறை : 2/39 பண் : இந்தாளம் இராகம் : நாதநாமகிரியா
இறைவர் : பிரம்மபுரீசுவரர் இறைவி : திருநிலைனாயகி
பாடல் எண் : 2
அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு
அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம்
பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கை யோர்பங்கு உடையான்
பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும்
இடும்பைக்கடல் நீத்தலாம் காரணமே.
திருப்பெருவேளூர்
திருமுறை : 3/64 பண் : பஞ்சமம் இராகம் : ஆகிரி
இறைவர் : பிரியா நாதர் இறைவி : ஏலவார் குழலி
பாடல் எண் : 1
அண்ணாவும் கழுக்குன்றும் ஆயமலை அவைவாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார்
கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரமெரித்த
பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக