வியாழன், 2 செப்டம்பர், 2010

ஸப்த ஸ்தலங்கள்


திருஆரூர்

இறைவர் திருப்பெயர் :
  • வன்மீக நாதர்,
  • புற்றிடங் கொண்டார் ( மூலட்டானம் - பூங்கோவில் ),
  • தியாகராஜர்.
இறைவியார் பெயர் :
  • அல்லியம் பூங்கோதை, 
  • கமலாம்பிகை,
  • நீலோத்பலாம்பாள்.
தலமரம் : பாதிரி.

தீர்த்தம்:
  • கமலாலயம்,
  • சங்கு தீர்த்தம்,
  • கயா தீர்த்தம்,
  • வாணி தீர்த்தம்
      வழிபட்டோர் :
      • திருமால்,
      • திருமகள்,
      • இராமர்,
      • மன்மதன்,
      • முசுகுந்த சக்ரவர்த்தி.
      தேவாரப்பாடல்கள் :

      திருஞான சம்பந்தர் :
      1. சித்தம் தெளிவீர்காள் ... [ 1/91 ],
      2. பாடலன் நான்மறையான் ... [ 1/105 ],
      3. பவனமாய்ச் சோடையாய் ... [ 2/79 ],
      4. பருக்கையானை மத்தகத் ... [ 2/101 ],
      5. அந்தமாய் உலகு ... [ 3/45 ]


      திருவாவுக்கரசர் :
      1. பாடிளம் பூதத்தினான் ... [ 4/4 ],
      2. மெய்யெல்லாம் வெண்ணீறு ... [ 4/5 ],
      3. எத் தீப்புகினும் ... [ 4/17 ],
      4. சூலப் படையானை ... [ 4/19 ],
      5. காண்டலே கருத்தாய் ... [ 4/20 ],
      6. முத்து விதானம் ... [ 4/21 ],
      7. படுகுழிப் பவத்தன்ன ... [ 4/52 ],
      8. குழல் வலம்கொண்ட ...[ 4/53 ],
      9. குலம் பலம்பாவரு ... [ 4/101 ],
      10. வேம்பினைப் பேசி ... [ 4/102 ],
      11. எப்போதும் இறையும் ... [ 5/6 ],
      12. கொக்கரை குழல் ... [ 5/7 ],
      13. கைம்மான மதகளிற்றின் ... [ 6/24 ],
      14. உயிரா வனமிருந்த ... [ 6/25 ],
      15. பாதித்தன் திருவுருவில் ... [ 6/26 ],
      16. பொய்ம் மாயப் பெருங்கடலில் ... [ 6/27 ],
      17. நீற்றினையும் நெற்றிமே ... [ 6/28 ],
      18. திருமணியைத் தித்திக்கும் ... [ 6/29 ],
      19. எம்பந்த வல்வினை நோய் ... [ 6/30 ],
      20. இடர் கெடுமாறெண்ணுதியேல் ... [ 6/31 ],
      21. கற்றவர்கள் உண்ணும் ... [ 6/32 ],
      22. பொரும்கை மதகரி ... [ 6/33 ],
      23. ஒருவனாய் உலகேத்த ... [ 6/34 ].
      சுந்தரமூர்த்தி சுவாமிகள் :
      1. இறைகளோடு இசைந்த ... [ 44 ],
      2. குருகுபா யக்கொழுங் ... [ 45 ],
      3. தில்லைவாழ் அந்தணர் ... [ 46 ],
      4. பத்திமையும் அடிமை ... [ 47 ],
      5. பொன்னும் மெய்பொருளும் ... [ 48 ],
      6. கரையுங் கடலும் ... [ 49 ],
      7. அந்தியும் நண்பகலும் ... [ 50 ],
      8. மீளா அடிமை ... [ 51 ],
      9. தூவாய ... [ 52 ],
      10. பாறு தாங்கிய ... [ 98 ],
      11. காட்டூர் கடலே ... [100].


      சிறப்புகள்
      • இத்தலம் "பிறக்க முத்தி திருஆரூர் " என்று புகழப்படும் சிறப்பினது.
      • இத்தலத்தில் சாயரட்சை எனப்படும் திருவந்திக்காப்பு வழிபாட்டின்போது தேவேந்திரனே வவ்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.
      • கமலை என்னும் பராசக்தி தவம் செய்த பதி.
      • எல்லாச் கிவாலயங்களின்சந்நிதித்தியனமும் சாயரட்சை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.
      • இத் தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது.திருவாரூர்த் தேர் அழகு.
      • ஏழு கோபுரங்களைக் கொண்டது இத் திருகோவில்.
      • கீழ்க் கோபுரம் 118 அடி உயரம் கொண்டது. இத் தலம் வீதிப் பிரகாரங்களையும் சேர்த்து ஐந்து பிரகாரங்களைக் கொண்டுள்ளது.
      • கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
      • தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. [ வீதி விடங்கர் ] சப்த கவிடங்கத் தலங்களுள் இது "மூலாதாரத் தலம்."
      • பஞ்ச பூதத் தலங்களுள் "பிருதிவித் (மண் )தலம்.

      • இத் தலத்திற்குரிய வேறு பெயர்கள் :


        1. ஷேத்ரவரபுரம்,
        2. ஆடகேசுரபுரம்,
        3. தேவயாகபுரம்,
        4. முசுகுந்தபுரம்,
        5. கலிசெலா நகரம்,
        6. அந்தரகேசுபுரம்,
        7. வன்மீகநாதபுரம்,
        8. தேவாசிரியபுரம்,
        9. சமற்காரபுரம்,
        10. மூலாதாரபுரம்,
        11. கமலாயபுரம்.
        • தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் "அஜபா நடன" மூர்த்தியாக திகழும் பதி.அதாவது திருமாலின் மார்பில் அமர்வ்து மூச்சிக்காற்றை உள்ளிழுத்து வெளியிடும்போது அசைந்தாடும் நடையில் உள்ள அதே நடனத்தை இங்கு ஆடுகிறார்.
        • இத்தலத்து இறைவர்:
        1. வீதி விடங்கர்,
        2. தேவரகண்டப்பெருமான்,
        3. தியாகப்பெருமான்,
        4. ஆடரவக்கிண்கிணிக்காலழகர்,
        5. செங்கழுநீரழகர்,
        6. செவ்வந்தித்தோடழகர்,
        7. கம்பிக்காதழகர்,
        8. தியாகவிநோதர்,
        9. கருணாகரத் தொண்டைமான்,
        10. அசைந்தாடும் அப்பர்,
        11. அடிக்காயிரம் பொன்வழங்கியவர்,
        12. கமலேசர்,
        13. செம்பொன் தியாகர்,
        14. தேவசிந்தாமணி,
        15. தியாகசிந்தாமணி என்றுஇன்னும் பலப்பல திருநாமங்களில் சிறப்பிகப் படுகிறார்.
        • மனுநீதிச் சோழன் நீதி கேட்ட, தங்கன்றை இழந்த ஒரு பசுவிற்காக தன் ஒரே மகனைத் தேரேற்றிக் கொன்று நீதி வழங்கியத் தலம்.
        1. ஆடு தண்டு - மணித்தண்டு,
        2. கொடி - தியாகக்கொடி,
        3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம்,
        4. மாலை - செங்கழுநீர்மாலை,
        5. வாள் - வீரகண்டயம்,
        6. நடனம் - அஜபா நடனம்,
        7. யானை -ஐராவணம்,
        8. மலை - அரதன சிருங்கம்,
        9. முரசு - பஞ்சமுக வாத்தியம்,
        10. நாதஸ்வரம் - பாரி,
        11. மத்தளம் - சுத்த மத்தளம்,
        12. குதிரை - வேதம்,
        13. நாடு - சோழ நாடு,
        14. ஊர் - திருவாரூர்,
        15. ஆறு - காவிரி,
        16. பண் -பதினெண்வகைப்பண், என்பன இவை யாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருளாகும்.
        • தியாகேசப் பெருமான் இராஜாதி இராஜா. ஆதலின் அவர் வீதிகளில் தனியாக எழுந்தருளுவதில்லை.அவருடன்
        1. அருளிப்பாடியார்,
        2. உரிமையில் தொழுவார்,
        3. உருத்திரப்பல்கணத்தார்,
        4. விரிசடை மாவிரதிகள்,
        5. அந்தணர்கள்,
        6. சைவர்கள்,
        7. பாசுபதர்கள்,
        8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார்.
        • "இம் மணிமுத்தாற்றில் இப் பொன்னை இட்டு, ஆரூர் கமலாயத்தில் எடுத்துக் கொள்" என்று முதுக்ன்றத்து ஈசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டத் தலம்.
        • சுந்தரர் வேண்டிக் கொண்டதன் பேரில் அவருக்காக இத் தலத் தியாகேசப் பெருமானார் நள்ள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடவ்து சென்ற பெருமையுடையத் தலம்.
        • பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.
        • சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி.
        • சுந்தரர், "திருத்தொண்டர் தொகை"யைப் பாடுதற்கு, அடியவர்களின் பெருமைகளை விளக்கிய பெருமையை உடையது இப்பதி.
        • அறுபத்து மூன்று நாயன்மார்களுள்
        1. நமிநந்தியடிகள்,
        2. செருத்துணை நாயனார்,
        3. தண்டியடிகள்,
        4. கழற்சிங்க நாயனார்,
        5. விறன்மிண்டர் ஆகியோர் முக்தித் த்லம்.
        இருப்பிடம்

        தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில் பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
                                                                                      

          கருத்துகள் இல்லை:

          அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

          அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1